இருபத்தைந்து நாட்கள் கடந்தோடிவிட்டன.. ஐம்பது பாடல்களைப் பார்த்து விட்டோம்.. இன்னும் ஐம்பது பாடல்கள் உள்ளன... தொடர்ந்து கவனிப்போம்..
பாடல் ஐம்பத்தொன்று.
அரணம் பொருள் என்று அருள் ஒன்றும் இலாத அசுரர் தங்கள்
முரண் அன்று அழிய முனிந்த பெம்மானும் முகுந்தனுமே
சரணம் சரணம் என நின்ற நாயகி தன் அடியார்
மரணம் பிறவி இரண்டும் எய்தார் இந்த வையகத்தே
விளக்கம் : தாங்கள் கட்டிய முப்புரங்களை நிலையான செல்வம் என்று நினைத்து அருளென்பதே இல்லாத அசுரர்களின் பகையை அழித்திட சினங்கொண்டெழுந்த சிவபெருமானும், முகுந்தனான திருமாலும் சரணம் சரணம் என்று வணங்கும்படி நின்ற அம்மையின் அடியார்கள் இந்த உலகத்தில் மரணம், பிறவி இரண்டையும் அடையமாட்டார்கள்..
மரணமில்லா பெருவாழ்வு அடைவது எங்ஙனம்? சாத்தியமற்ற ஒன்று... ஆனால் இதை அம்மையின் அடியார்கள் அடைவார்கள் என்று அபிராமிப் பட்டர் உரைக்கின்றாரே... ! சிந்திப்போம்... இதையே வள்ளுவன் "வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர்" என்றுரைத்தான்.. அபிராமிப் பட்டர் இன்றையதினம் நம்மிடையே இல்லை... ஆயினும் அவர் தந்த அழகிய பாடல்களால், தமது பக்தி எனும் பெருந்தொண்டால், தமிழ் உள்ளளவும், தமிழ்நாடு உள்ளளவும் என்றென்றும் இருப்பார் இல்லையா?? அதுதான் மரணமில்லாப் பெருவாழ்வு.. அதைப்பற்றித்தான் அபிராமிப் பட்டர் இவ்விடத்து உரைக்கின்றார்...
"அரணம் பொருள் என்று " தாங்கள் கட்டிய கோட்டைகளையே நிலையான செல்வம் என்று நினைத்து... முப்புரங்களைக் கட்டிய அசுரர்களுக்கு அதுவே நிலையானது என்ற எண்ணம் தோன்றிவிடுகிறது. பின்னர் அதுவே அவர்தம் அழிவுக்கும் வித்தாகி விடுகின்றது.. "அருள் ஒன்றும் இலாத" அருளே இல்லாத ... கருணையே இல்லாத... தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் கொடுமைகள் புரிந்த.... கவனிக்க வேண்டிய செய்தி நமக்கும் இவ்வரிகளில் உள்ளது... பொருட்செல்வத்தை நிலையானது என்று நாம் நினைக்கத் துவங்கும் வேளை நம் மனத்திலிருந்து அருளானது தானாகவே வெளியேறிவிடுகின்றது... எனவேதான் வள்ளுவனும்
"தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கோர்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு" என்று பகர்ந்தான்.. திருமகள் நம் இல்லத்தைத் தன் அருளால் நிரப்புவது, நம் மனந்தனில் குடிகொண்ட அருளை வெளியேற்றுவதற்கு அல்ல.. தகுதியுடையோர்க்கு உதவி செய்வதற்காகத்தான்.. எனவே பொருள் வரும் வேளை, அதை நிலையென்று நினைத்தால் அருள் போய்விடும்... அதையே நிலையானதன்று என எண்ணித் தருமங்கள் செய்து வந்தால் நீக்கமில்லா நிலையான வாழ்வு பெறலாம்.. "அசுரர் தங்கள் முரண் " தங்கள் கோட்டைகளே நிலையானது என்று நினைத்த அசுரர்களின் பகைமை.... "அன்று அழிய முனிந்த பெம்மானும் " அழிய வேண்டும் என்று சினங்கொண்டு எழுந்த சிவபெருமானும், "முகுந்தனுமே" திருமாலுமே.. "சரணம் சரணம் என நின்ற நாயகி " சரணம் சரணம் என்று வணங்கும்படி நின்ற அம்மை...முப்புர அசுரர்களை அழித்து மாந்தரைக் காத்தவர் ஈசனென்றால், தசாவதாரங்களை எடுத்து தீமைகளினின்று மாந்தரைக் காத்தவர் திருமால்... இவர்கள் இருவருமே அம்மை ஆதிபராசக்தியிடம் சரணம் சரணம் என்று வந்து வணங்கி நின்றார்கள்.. ஏனெனில் அவர்களைப் படைத்தவளே அந்த பராசக்திதான்... "தன் அடியார் மரணம் பிறவி இரண்டும் எய்தார் இந்த வையகத்தே" அன்னையின் அடியார்கள்... அவளையே சரண்புகுபவர்கள் மரணம், பிறப்பு என்ற சுழற்சி வாழ்க்கையை மீண்டும் எய்த மாட்டார்கள். பிறப்பறுக்கப் படவேண்டும் என்று அன்னையை வேண்டிய அபிராமிப் பட்டர்... மரணம் எய்தும் வேளை என் அருகே வந்து நில்லம்மா என வேண்டிய அபிராமிப் பட்டர்... இவ்விடத்து அன்னையின் அடியார்கள் மரணமெய்த மாட்டார்கள் என்று சொல்வதன் காரணம் என்ன?? மரணம் என்புதோல் போர்த்திய இந்த உடம்புக்குத்தானேயன்றி, நமது ஆன்மாவுக்கல்ல... அன்னையை நம்பினார், அவளடியே சரணமென்று தஞ்சமடைந்தோருக்கு மீண்டும் பிறப்பில்லை... அவர்களது ஆன்மாவுக்கு மரணமேயில்லை... அது மீண்டும் ஒரு உடலைத் தனக்கு வேண்டுமென்று தேடிச் செல்லாது... செல்லவேண்டிய அவசியத்தையும் அது தாண்டி முக்தி பெற்று விடுகின்றது.. அது பிறப்பறுப்பினைக் குறிக்கின்றது... மரணமில்லாப் பெருவாழ்வு என்பது அன்னையின் அடியார்களுக்குக் கிடைத்த வரம். அன்னையையே தஞ்சமென்று நம்பி விழுந்தோர், புண்ணியங்களை மட்டுமே புரிவாரன்றி, பாவங்களைச் சுமப்பதில்லை... அவர்தம் புண்ணியங்களே அவர்களது பெயர்களை இவ்வுலகத்தில் நிலைநிறுத்திவிடுகின்றது...
பாடல் ஐம்பத்திரண்டு
வையம் துரகம் மதகரி மாமகுடம் சிவிகை
பெய்யும் கனகம் பெருவிலை ஆரம் பிறை முடித்த
ஐயன் திருமனையாள் அடித் தாமரைக்கு அன்பு முன்பு
செய்யும் தவமுடையார்க்கு உளவாகிய சின்னங்களே
விளக்கம் : பிறை நிலவைத் தன் தலைமேல் அணிந்த சிவபெருமானின் திருமனையாளான அன்னை அபிராமியின் திருவடித்தாமரைகள் மேல் அன்பு செய்து அவளை எண்ணித் தவமியற்றுபவருக்கு கிடைக்கும் சின்னங்களாவன... வையகம், குதிரை, ஆனை, மாமகுடம், பல்லக்கு, கொட்டும் பொன், விலையுயர்ந்த முத்து மாலைகள்...
அன்னையை எண்ணித் துதிப்போர்க்கு இம்மையில் கிட்டும் செல்வங்களை இப்பாடல் பட்டியலிடுகிறது. இப்பட்டியலில் இடம்பெற்றவையெல்லாம் பெற்றிருப்போர் பெரும் செல்வந்தர்களாக இருப்பார்கள்.. நாமும் இப்பாடலைப் பாடி பெருஞ்செல்வமடைவோம்... (செல்வம் சேருங்காலை முந்தைய பாடலையும் பாடிடுவோம். அப்போதுதான் பொருளோடு அருளும் கூடியிருக்கும்).
"பிறை முடித்த ஐயன் திருமனையாள் " பிறை நிலவைத் தன் சடையிலே அணிந்த சிவபெருமானின் மனையாட்டியின்... அன்னை அபிராமியின்...."அடித் தாமரைக்கு அன்பு முன்பு செய்யும் தவமுடையார்க்கு " திருவடித்தாமரைகள் மேல் அன்பு செய்யும்பொருட்டு முன்னர் தவமியற்றியவர்களுக்கு... "உளவாகிய சின்னங்களே " கிடைக்கும் சின்னங்களாவன.... "வையம" இந்த வையகம்... இந்த வையகமே அவர்தம் வசமாகும்... "துரகம்" குதிரைகள் கிடைக்கும்... "மதகரி" மதம் நிறைந்த பெரிய ஆனைகள் கிடைக்கும்.. "மாமகுடம்" பெரிய மணிமகுடம் கிடைக்கும். "சிவிகை" அவர்களைச் சுமந்து செல்ல அழகிய பல்லக்குகள் கிடைக்கும். "பெய்யும் கனகம்.." கொட்டும் பொன் கிடைக்கும். தங்க மழை பெய்யும்... சங்கரர் தேவியை வேண்டி கனக நெல்லிகளை மழையெனப் பெய்யச் செய்த வரலாறு நினைவுக்கு வருகின்றது.. "பெருவிலை ஆரம்" அதிக விலைபடைத்த முத்து மாலைகள், மாணிக்க மாலைகள் கிடைக்கும்...
அன்னையின் திருவடிகளை மட்டுமே எண்ணித் தவமியற்றுபவர்களுக்கு இதெல்லாம் கிடைக்கும்... பின்னரும் அவர் அவள்தம் அன்பிலே நீடித்திருந்தால் அருள் கிடைக்கும்... இந்த பாடலினை முதலிலும், முந்தைய பாடலை அடுத்தும் வரிசை மாற்றி வாசித்துப் பாருங்கள்... அழகிய பொருள் (இவ்விடத்து அர்த்தம் என்று அர்த்தமாகின்றது) கிடைக்கும்.. அன்னையை எண்ணித் தவமியற்றுபவர்களுக்கு பொருட்செல்வம் மிகுதியாகக் கிடைக்கும்.. பொருட்செல்வத்தில் திளைப்போர் அருள் மறந்து போனால் அழிவார்கள்... அவளிடம் அன்பு செய்து அவள் அடியார்களாக இருப்பவர்கள் மரணம், பிறப்பற்ற நிலை எய்துவார்கள்..
தொடரும் பாடல்களின் விளக்கம் அடுத்த மடலில்.. மீண்டும் சந்திப்போம்.. நன்றி...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக