சனி, மார்ச் 13, 2010

யாராவது வக்கீல்கள் இருக்கீங்களாய்யா???

இந்த செய்தியைப் படிச்சுப் பாருங்கய்யா......
http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=6880
என்ன ஒரு கொடுமை.
தேர்தலில் வெற்றி பெற முடியலன்னு நம்ம மருத்துவர் அய்யா உள்ள்ம் குமுறியிருக்கார்... அவர் தோட்டத்த வித்தாவது ஒரு ரெண்டு மூணு தொகுதிய வாங்கிப் போடலாம்னு நினைச்சு இப்படிப் பேசலாமா??
இது நியாயமா??
நான் பட்டப் படிப்பு படித்துக்கொண்டிருந்த வேளையில் மருத்துவரின் ஒரு முட்டாள்த்தனமான அறிக்கை எங்களைக் கோபமூட்டியது. அச்சமயத்தில் எப்படியும் முதல்வர் பதவி பெற்றிட வேண்டும் என விரும்பி தமிழகத்தை இரண்டாகப் பிரிக்கும் விருப்பத்தை உள்ளடக்கிய அறிக்கை அது.. ஆற்காடு போன்ற தமிழகத்தின் வட மாவட்டங்களில் தன்னுடைய உறுதியான நிலையைக் கருத்தில் கொண்டு இதுபோன்ற மட்டமான அறிக்கையை வெளியிட்டிருந்தார்... அவ்வமயம் அவரின் நெல்லை வருகையின்போது அவரை வெட்டிக் கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு அதற்கெனவே சிறப்பாக செய்யப்பட்ட அரிவாள்களோடு காத்திருந்தோம்.. பின்னர் பல்வேறு காரணங்களால் மனம் மாறி (அப்போதுதான் காந்தியச்சிந்தனைகள் எங்கள் பாடமாக இருந்தது. ஒரு நற்பேராசிரியர் எங்களுக்குக் கிடைத்தார்.) அவ்வெண்ணத்தைக் கைவிட்டோம்...
ஆனால் எப்படியாவது அரியணையில் அமர்ந்துவிடத் துடித்துக் கொண்டிருக்கும் மருத்துவர் இம்முறை இப்படிப்பட்ட கேவலமான அறிக்கைகளை விடுகிறார்.
இது போன்ற அறிக்கைகளைப் பத்திரிக்கையாளர்களும், பொதுநல விரும்பிகளும் கிண்டல் செய்வதற்காக விடலாம்.. ஆனால் மக்களாட்சி நடைபெறும் நாட்டில், அரசின் கொடுமைகளை எதிர்த்துப் போராட வேண்டிய எதிர்க்கட்சிகள் வரிசையில் அமர்ந்து கொண்டு இப்படி நையாண்டி பேசுவதில் என்ன புண்ணியம்?
சாகும் வரை பதவியில் அமரவேண்டும் என்பது மட்டுமே பாமகவின் கொள்கை..
கடந்த முறை பாராளுமன்ற தேர்தலின்போதும் அதற்கு முன்னரும் இதனைக் கண்கூடாகக் கண்டோம்.. இன்னமும் இது போன்ற அறிக்கைகளை விடுத்து கேலிக்கூத்து செய்து கொண்டிருக்கிறார்...
அய்யா...
யாராவது வக்கீல்கள் இருக்கீங்களாய்யா???
தேர்தல் ஆணையத்தையும் , இந்திய ஜனநாயகத்தையும் கேலிக்கூத்தாக்கிய இந்த அய்யா மேல வழக்குப் போடுறதுக்கு எதாவது வழி இருக்கான்னு பார்த்து சொல்லுங்க...???
உங்க பதிலை எதிர்பார்க்கிறேன்....